அரசியல் கட்சியின் கூட்டத்திற்காக கொழும்பு வந்த நபரை காணவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற அரசியல் கட்சி ஒன்றின் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள, அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து சிலருடன் வந்த நபர் காணாமல் போயுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை ரிதியகம பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத 57 வயதான நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கொழும்பில் நடந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த இந்த நபர் வீட்டுக்கு திரும்பவில்லை என அவரது சகோதரி கடந்த 21ஆம் திகதி அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போயுள்ளதாக கூறப்படும் இந்த நபர் குறித்து அம்பலாந்தோட்டை மற்றும் கொழும்பு கோட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Latest Offers

loading...