தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை

Report Print Steephen Steephen in சமூகம்

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்துள்ள நாடாக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளது.

இந்த விடயத்தை பாலியல் சார்ந்த நோய்கள், எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான சான்றிதழ் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக அமைப்பின் பிரதி பணிப்பாளர் லிலானி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் கர்ப்பமடைந்திருந்தால், அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கு அந்த வைரஸ் பரவாமல் மருந்துகள் மூலம் தடுக்கும் முறையை இலங்கை மருத்துவத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

Latest Offers