யாழில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை பகுதியில் உள்ள வீட்டு வளவில் கஞ்சா செடிகள் மூன்றினை வளர்த்து வந்த நபரொருவர் இன்றைய தினம் காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 49 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சிவில் உடை தரித்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டுத் தோட்டத்துக்குள் மறைவாக வளர்த்து வந்த மூன்று கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டிற்கு கஞ்சாவினை கொள்வனவு செய்ய வந்திருந்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்கு பின் அவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest Offers

loading...