சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - குரும்பசிட்டி பகுதியில் கஞ்சா நுகர்ந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குரும்பசிட்டி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து தலா 8 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.