கீத் நொயர் மீது தாக்குதல்! கோரப்படும் அமெரிக்க புலனாய்வு துறையினரின் உதவி

Report Print Ajith Ajith in சமூகம்

ஊடகவியலாளர் கீத் நொயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவின் புலனாய்வு துறையான எப்பிஐயின் உதவியை பெற்றுக் கொள்ள இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீத் நொயர் தாக்கப்பட்டமைக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி குரல் பதிவுகள் தொடர்பான அறிக்கை இன்னும் இலங்கைக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்தே எப்பிஐ நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொள்ள இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

2008ஆம் ஆண்டு மே 22ஆம் திகதியன்று கீத் நொயர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடத்தலுக்கு முன் உயர் மட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers