வட்டக்கச்சி பகுதியில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் தொல்லை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு தனிச்சன் யானை ஒன்று மக்களை கடந்த மூன்று நாட்களாக தொந்தரவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் யானையொன்று மக்கள் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.

இதன்போது அதனை கலைக்க முற்பட்ட போது ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் குறித்த யானையிலிருந்து பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.