மட்டக்களப்பில் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் பலர் படுகாயம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பாசிக்குடா சுனாமி வீட்டுத் திட்ட கிராமத்தில் இன்று காலை வழிபாட்டிற்கு சென்றவர்களை குழுவொன்று வழிமறித்து தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கம் போல் இன்று காலை வழிபாட்டிற்கு சென்றவர்களை வழியில் இடைமறித்து அந்த பிரதேசத்தை சேர்ந்த கும்பலொன்று தாக்கியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.