பெரிய நீலாவணை பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சிறிய தந்தை

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் 16 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சிறுமியின் சிறிய தந்தை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சம்மாந்துறை, மல்வத்தை, தம்பி நாயகபுரம் பகுதியை சேர்ந்த (வயது 23) சந்திரசேகரம் வசந்தன் என தெரியவருகிறது.

அத்துடன் குறித்த நபர் திருமணமானவரெனவும், அவர் மரம் வெட்டும் தொழில் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த துஷ்பிரயோக சம்பவம் நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போதிலும் தற்போது சிறுமி கர்ப்பம் தரித்தமையினால் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடாக வந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் மல்வத்தை தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers