திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபரொருவர் படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - ஹொரவ்பொத்தான, மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

ஹொரவ்பொத்தான பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் அதே வழியாக வந்த மற்றுமொரு மோட்டார்சைக்கிளொன்று விகாரைக்கு செல்வதற்காக திரும்பிய மோட்டார்சைக்கிளுடன் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த மஹதிவுல்வெவ - சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஏ.குலதுங்க (71 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார்வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.