வவுனியாவில் சுகயீன விடுமுறைப் போராட்டம்

Report Print Theesan in சமூகம்
69Shares

அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்றைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பல்வேறு உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

அரச நிர்வாக அமைச்சினால் ஒருதரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதனால் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச செயலகங்களிற்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்திருந்தனர். இதேவளை, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் ஒரு சில சேவைகள் மாத்திரம் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.