நீதிமன்ற உத்தரவின் பின்னர் ஞானசார தேரர் அட்டகாசம்! முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள திடீர் பதற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறி, உயிரிழந்த தேரரின் உடலுக்கு தகனம் செய்ய முயன்றமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரை தகனம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்திருந்தது.

எனினும் அந்த தடையை மீறி ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஆலய வளாகத்திற்குள் உடலை புதைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புற்றுநோயினால் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை நீராவியடி அமைந்துள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.