இறந்த ஆத்மா நிம்மதியாக அடக்கம் செய்யப்பட வேண்டும்: நாக விகாரை விகாராதிபதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

இறந்த ஆத்மா நிம்மதியாக ஓரிடத்தில் அடக்கம் செய்யப்படவேண்டும் என யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மிஹிகஹாஜண்டுரே சிறிவிமல தேரர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின், விகாராதிபதி கொலம்பே மேதாலங்கார கீர்த்தி தேரரின் இறந்த உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலை தொடர்பில் இன்று எமது செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கொலம்பே மேதாலங்கார கீர்த்தி தேரரின் மறைவு பாரியதொரு இழப்பாகும்.

பழமை வாய்ந்த விகாரை ஒன்றின் விகாரதிபதியின் இறந்த உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலை மிகுந்த கவலையளிக்கின்றது. இறந்த ஆத்மாவை நிம்மதியான ஓரிடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.