கிண்ணியா பிரதேச சபையில் புதிய உறுப்பினர் நியமனம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் கிண்ணியா பிரதேச சபையின் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்ட முகம்மது சுல்த்தான் நிஜாம்தீன் நகர சபை தவிசாளரின் முன்னிலையில் இன்று காலை சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன் அவர் உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளர் நசுர்தீன், உயர் உறுப்பினர்கள், வட்டார ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் குறிஞ்சாக்கேணி பகுதியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி சார்பாக போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.