அரசியல் கட்சிகளின் தலைமைகள் இருந்தும் பயனில்லை! விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு

Report Print Malar in சமூகம்

தமது உறவுகளினால் கைவிடப்பட்ட நபர்கள் பெரும் துயர்களின் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை ஏதோ ஒரு வகையில் நடத்திக் கொண்டு செல்கின்றனர்.

அந்தவகையில், கிழக்கு மாகாணம் - முதூர் பகுதியில் வசிக்கும் குணபூசனம் தனது 81ஆவது வயதிலும் பயிர்ச்செய்கையினை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றார்.

இவருடைய ஒரு பிள்ளை வீரச்சாவடைந்த நிலையில், மற்றொரு பிள்ளையால் கைவிடப்பட்டு தனது மனைவி தெய்வானை பிள்ளையோடு வாழ்கின்றார்.

இந்த பகுதியில் அரசியல் கட்சிகளின் தலைமைகள் இருந்தும், அவர்களினால் எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை எனவும், விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் குணபூசனம் கூறுகிறார்.

இவரின் வாழ்வில் எதிர்நோக்கும் சொல்லண்ணா துயரங்களை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக உங்கள் பார்வைக்காக,