கண்பார்வை அற்று தனிமையில் வாழும் ஒரு தாயின் அவலம்

Report Print Malar in சமூகம்

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பல காயங்களுக்குள்ளாகி பல கஷ்டங்களுக்கு மத்தியில் தமது வாழ்நாளை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு வருடமாக கண் பார்வை இழந்து மற்றவர்களிடம் கை ஏந்தி தனிமையில் வாழும் தாய் தான் நாகம்மா.

65 வயதான இவருக்கு தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

இவரை ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலம் நிகழ்வினூடாக தொடர்பினை மேற்கொண்ட போது, அவர் தமது வாழ்நாளில் அனுபவித்த கஷ்டங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.