வைத்தியசாலைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த நாயினால் குழப்பம்

Report Print Vethu Vethu in சமூகம்
269Shares

ஹொரவபொத்தான பிரதேசத்தில் வைத்தியசாலைக்குள் நுழைந்த நாய் ஒன்று தாதி மற்றும் நோயாளர்களை கடித்துக் குதறியுள்ளது.

5 நோயாளிகளும் இரண்டு தாதிகளும் நாய் கடிக்குள்ளான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அதிகரித்துள்ள நாய்களின் தொல்லையால் பல முறை இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசர் நாய் ஒன்றே இவ்வாறு கடித்து குதறியுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த நாயை பொலிஸார் சுட்டுக்கொலை செய்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.