யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காந்தியின் ஜனன தின நிகழ்வுகள்

Report Print Sumi in சமூகம்

இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

இன்று காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள காந்தி நினைவிடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காந்தியின் உருவச்சிலைக்கு இந்தியதுணைத்தூதுவர் மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியதுணைத்தூதுவர்,இந்திய துணை தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாண மாநகர மேயர் ஆர்னோல்ட், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் , யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், காந்தி சேவா அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.