அவுஸ்திரேலியாவில் சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் தமிழ் குடும்பம் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள உத்தரவு

Report Print Jeslin Jeslin in சமூகம்
601Shares

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கி, தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த முப்பது நாட்களிற்குள் இலங்கை தம்பதியினரையும் அவர்களது குடும்பத்தையும் சமூக சூழ்நிலைக்குள் விடுதலை செய்யவேண்டும் அல்லது கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த தகவலை நடேஸ் மற்று பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரினா போர்ட் உறுதி செய்துள்ளார்.

தமிழ் குடும்பத்தை விடுதலை செய்வதற்கு அரசாங்கத்தை தூண்டும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கும் என குறித்த சட்டத்தரணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடேஸ் பிரியா தம்பதியினரும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரும் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவர்களிற்கான மாற்றுவழிகளை கோரிவருகின்றோம் என தெரிவித்துள்ள அவர் நடேஸ் பிரியா குடும்பத்தினரை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் எனவும் குறித்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.