திருகோணமலை மக்கள் பலரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவாக

Report Print Mubarak in சமூகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மக்கள் பலரும் இணைந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர் மற்றும் பல பகுதிகளில் சஜித்தின் ஆதரவாளர்கள் மக்களை சந்தித்து வருகின்றனர்.

அத்தோடு அனைத்து பகுதிகளிலும் சஜித்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சந்தீப் சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் இணைந்து கட்சி ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.