வவுனியாவில் புகையிரத சேவைகள் பாதிப்பு: பயணிகள் அசௌகரியம்

Report Print Theesan in சமூகம்
51Shares

புகையிரத தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இன்றும் வவுனியா புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் அசௌகரியங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினமும் அதிகாலை 3.35இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி புகையிரதம் வவுனியாவிலேயே தரித்து நிற்பதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.