இலங்கையில் தற்போது, புகையிரதங்களில் பயணிகள் பயணிக்கும் விதம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக புகையிரத ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புகையிரத சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக சில பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதங்களில் பயணிகள் செல்லும் விதம் தற்போது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரத எஞ்சின்களுக்கு மேல் அமர்ந்தவாறு பயணிகள் பயணிக்கும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.