கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞருக்கு திருகோணமலை நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை நகர் பகுதியில் வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் முன்னிலையில் இன்று சந்தேகநபரை முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் சில வீடுகளுக்குச் சென்று வீட்டிலுள்ள பொருட்களையும், தங்க ஆபரணங்களையும் சந்தேகநபர் திருடி வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை - மரத்தடி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.