மன்னாரில் சஜித்தின் வீடமைப்பு கல்வெட்டு உடைப்பு

Report Print Ashik in சமூகம்

அண்மையில் வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தோட்டவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜோசப்வாஸ் நகர் மற்றும் ஜோசப் புரம் ஆகிய இரு மாதிரி கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த கிராமங்களுக்கான வரவேற்பு கல்வெட்டானது இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தோட்டவெளி கிராமத்தினூடாக செல்வதற்கு அடையாளமாக அமைக்கப்பட குறித்த கல்வெட்டு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

உடைக்கப்பட குறித்த கல்வெட்டு சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.