காரைதீவில் உணவகம் ஒன்றில் தீப் பரவல்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
84Shares

காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் இன்று நண்பகல் சமையல் எரிவாயுவை மாற்ற முற்பட்ட வேளை தீயானது பரவத் தொடங்கியுள்ளது.

இதன்போது, ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பொதுமக்களுடன் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத் தீப் பரவலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.