யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

Report Print Dias Dias in சமூகம்

யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் அராலி, பொன்னாலை சந்திப்பகுதியில் உள்ள 7.5 ஏக்கர் காணியில் இந்த வீடுகள் அமையவுள்ளன. 600 சதுர அடிகளை கொண்ட இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடுகளாக ஒவ்வொன்றும் அமையும்.

இந்த வீட்டுத் திட்டம் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது , இந்த வீட்டுத் திட்டத்திற்கு ஆலோசனை செய்திருந்தார்.

அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் யாழ். முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.

அப்போது, என்ன நடந்தாலும் வீட்டுத் திட்டத்தை அமைத்துத் தருவேன் என யாழ். முதல்வர் கூறியிருந்தார்.

கடந்த முறை பிரதமர் யாழ். சென்றிருந்த போது நடந்த அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில், வீடு தேவையானவர்களின் உண்மையான பதிவை விட அதிக தொகையை ரிசாத் தரப்பு குறிப்பிடுவதை யாழ். அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த பகுதியிலுள்ள தமிழ் சட்டத்தரணியொருவர் இந்த காணியை விற்பனை செய்திருந்தார். குடியேற்றம் அமைப்பதற்காக இந்த காணியை முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.