இரு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பொகவந்தலாவ - கிலானி தோட்டப் பகுதியில் வைத்து காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி மதியம் தனது வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த வேளை குறித்தநபர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இவரை மீட்கும் பணி இரு நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கிலானி தோட்ட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் எனத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.