விபத்தில் சிக்கியவர்கள் வீதியில் அழுது புலம்பிய பரிதாபம்! மட்டக்களப்பில் சம்பவம்

Report Print Sethu Sethu in சமூகம்
0Shares

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர்களை ஏற்றிச் செல்ல யாரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் வீதி ஓரத்தில் இருந்து அழுதுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு, சத்துக்கொண்டான் பிரதான வீதியில் சென்ற நபர் ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியதுடன் முச்சக்கர வண்டி மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதால் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.

இதன்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நான்கு பேரையும் ஏற்றிச் செல்வதற்கு வீதியால் சென்ற வாகனங்கள் எதுவும் முன்வராததால் படுகாயம் அடைந்த நபர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் காயமடைந்தவர்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் வீதியோரத்தில் அழுது புலம்பியுள்ளனர்.

பின்னர் அவசர ஆம்பியுலன்ஸ் 1990 இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னரே மட்டக்களப்பு நகர பொலிஸாரும் ஆம்பியுலன்ஸூம் வருகை தந்து படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்து முச்சக்கர வண்டிக்குள் சிக்கி தவித்தவர்களை வீதியால் சென்ற இளைஞர்கள் சிலர் மீட்டு வெளியே எடுத்தபோதும் அவர்களை ஏற்றிச் செல்ல வீதியால் வந்த எந்த வாகனமும் முன்வரவில்லை. பல முச்சக்கர வண்டிகள், பட்டா ரக வாகனங்களை இளைஞர்கள் மறித்த போதும் அந்த வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன.