மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதைபதைக்கும் சம்பவம்! தொடரும் அவலம்

Report Print Malar in சமூகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது பிரசவம் இன்று இடம்பெற்றிருந்த போது குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது.

எனினும் குறித்த பெண்னை சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப் பெற வேண்டும் என வைத்தியர்கள் கோரிய நிலையில், சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை வெளியில் எடுக்குமாறு உறவினர்களினால் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தை பிரசவிக்கப்பட்ட போதிலும் குழந்தையினை யாரிடமும் காட்டாமல் கழிவுகள் போடும் பெட்டியொன்றுக்குள் போட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்படுவதாகவும், சத்திரசிகிச்சையின் போது காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த குழந்தை தொடர்பான தகவல்களை வழங்காமல் வைத்தியர்களும், தாதியர்களும் மறைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த தாய் தொடர்ச்சியாக மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

இத் துயரச் சம்பவத்திற்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணமென குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வைத்தியசாலையில் சிறுவன் ஒருவன் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியிருந்தது.

இதேவேளை தற்போது நிகழ்ந்துள்ள சிசுவின் மரணம் மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 23 வைத்தியர்கள் கொண்டு இயங்கி வந்து போது, அன்று நேர்ந்திட சம்பவங்கள் தற்போது 2019ஆம் ஆண்டு 250 நிபுணர்கள் உள்ளடங்கலாக 300 வைத்தியர்கள் கொண்டு இயங்கி வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றது.

கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் வைத்தியர்களே கவனயீனமாக செயற்படுவது முறையானதா? இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் ஒட்டுமொத்த வைத்தியர்கள் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி விடும்.