வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றத்தினர் அரச அதிபருடன் சந்திப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றத்தினர், மாவட்ட அரச அதிபர் எம். கனிபாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை இன்றையதினம் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக வவுனியா வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமான கச்சல் சமனங்குளம் பகுதியில், விகாரை அமைக்கும் பணி இடம்பெற்று வருவதுடன், புதிதாக கட்டங்களும் அமைக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் இது எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடாக காணப்படுகின்றமை தொடர்பிலும்,வவுனியா மாவட்டத்தி நுண் நிதி நிறுவனங்களின் செயற்பாட்டினால் பாதிக்கபட்டுள்ள பெண்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க கோரியும் இதன்போது அரச அதிபரிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதன்போது தேர்தல் முடிந்த பின்னர் நுண்நிதி விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் இணைத்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதாக அரச அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.