ஆசிரியர்களின் 5 நாள் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

Report Print Murali Murali in சமூகம்

சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள தீர்வு குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்ப்பதாக அசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐந்து நாள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.