மகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதரகம் துணை

Report Print Yathu in சமூகம்

மகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதரகம் என்றும் துணையாக இருக்கும் என யாழ். இந்திய பதில் துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிறுவர் இல்ல வளாகத்தில் அகில இலங்கை காந்தி சேவா சங்கமும், கிளிநொச்சி காந்தி சிறுவர் இல்லமும் இணைந்து காந்தி ஜெயந்தி தின விழாவினை கொண்டாடியுள்ளனர்.

இந்நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் பதில் துணைத்தூதுவர் ஆர்.பக்ரா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், மதுரை காந்தி மியூசியத்தை சேர்ந்த மு.சீ.தேவதாஸ் காந்தி, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சு.விஜியகுமாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது இம்மாதத்திற்கான காந்தீயம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், காந்தி ஜெயந்தி தின போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களிற்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.