ரயில்வே ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in சமூகம்

எந்தவித அறிவிப்பும் இன்றி, சேவைக்கு சமூகம் அளிக்காத ரயில்வே ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில்வேயின் ஆறு பிரிவுகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 25ம் திகதி முதல் முன்னெடுக்கும் போராட்டம் இன்று எழாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

இன்றும் 12 ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க,

“அறிவித்தல் எதுவுமின்றி சேவைக்கு சமூகம் அளிக்காத ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவர்” என அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தமது பொறியியலாளர்களை ஈடுபடுத்தி நாளை முதல் ரயில் சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.


you may like this video...