தமிழரின் வளங்களை அழிக்காதே! வாழைச்சேனையில் போராட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை வெம்பில் அமையப் பெற்றுள்ள மென்டிஸ் கம்பனியை உடன் இடை நிறுத்தி தருமாறு கோரி இன்று பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கும்புறு மூலை சந்தியின் பிரதான வீதியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டமானது கால்நடையாக ஊர்வலமாக வாழைச்சேனை பிரதேச செயலகத்தினை வந்தடைந்துள்ளது.

'வேண்டாம் வேண்டாம் மெண்டிஸ் கம்பனி வேண்டாம்.''தமிழரின் வளங்களை அழிக்காதே',வாழ விடு வாழ விடு மூடி விடு, மூடி விடு கம்பனியை மூடி விடு.' என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து வந்துள்ளனர்.

இதன்போது பிரதேச செயலாளர் ஏ.தனபாலசுந்தரத்திடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக மதுவரி திணைக்கள ஆணையாளர் திணைக்களத்தினால் தங்களுக்கு இவ்விடயம் தொடர்பான ஆய்வறிக்கையினை அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.