மைத்திரியிடம் மஹிந்த கேட்ட உதவி! திருமண பந்தத்தில் இன்று இணையும் யோஷித

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சவின் திருமண வைபவம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 9.30 மணியளவில் காலி முகத்திடலில் உள்ள ஹோட்டலில் திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஜுலை மாதம் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் நிதிஷா ஜயசேகரவை திருமணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

திருமண நிகழ்வின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை வீரக்கெட்டிய மெதமுலன வீட்டில் இரண்டாவது நாள் நிகழ்வு இடம்பெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. திருமண நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ச தனக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வழக்கு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டிருந்த யோஷித ராஜபக்சவின் கடற்படை பணி கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது.

திருமண நிகழ்வில் கடற்படை மரியாதை பெற்றுக்கொள்ள யோஷித விரும்பியமையினால் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்ட தனிப்பட்ட உதவிக்காக ஜனாதிபதியால், யோசித மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.