வவுனியாவில் சிறுமி மீது துஷ்பிரயோகம்: சந்தேகநபர் தலைமறைவு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிதம்பரம், கற்குளம் - 2 பகுதியில் தந்தையும், மகளும் வசித்து வந்துள்ளனர்.

தாய் வெளிநாடு ஒன்றிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமி அப்பகுதியில் வசிக்கும் மேசன் வேலை செய்யும் ஒரு நபருடன் நீண்ட நாட்களாக நட்புறவுடன் பழகி வந்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று காலை சிறுமியை அந்த நபர் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியின் தந்தை மகளை காணவில்லை என தேடி சென்ற சமயம் தந்தை வருவதை கண்ட குறித்த நபர் தப்பித்து சென்றுள்ளார்.

இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தப்பித்து சென்றதால் அவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.