கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது

Report Print Sumi in சமூகம்

கிளிநொச்சி - பளையில் 12 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 6.6 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர் சிக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தாளயடியை சேர்ந்த 21 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் பயணித்த மோட்டார்சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதாகிய இளைஞர் மேலதிக விசாரணைக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.