பலரையும் நெகிழ வைத்த செயல்! தனது நண்பனை பாடசாலைக்கு சுமந்து செல்லும் நட்பு

Report Print Vethu Vethu in சமூகம்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நேற்று முன்தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதுடன் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இரண்டு கால்களையும் இழந்த தனது நண்பனை மற்ற நண்பனை தோளில் சுமந்து செல்லும் புகைப்படங்களே இணையத்தில் வெளியாகியுள்ளன.

சிறுவர் தினத்தன்று யாபஹூவ கல்வெட்டுகளை பார்வையிட சென்ற போது இந்த சம்பவத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

பிரபல ஊடகவியலாளர் ஒருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

தனது நண்பனை சுமந்து செல்லும் நண்பனின் பாசத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.