திருகோணமலையில் மாடுகளை திருடி விற்பனை செய்த மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் .

அக்போபுர பகுதியில் மாடுகளை திருடி விற்பனை செய்து வருவதாக திருகோணமலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

அக்போபுர மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32,29 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...