பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் கிழமை (7) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பமனு ஏற்கும் நிகழ்வினை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இதன்படி பொரல்லை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு அனைத்து பாடசாலைகளும், ராஜகிரிய பகுதியில் 3 பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.

வேட்புமனு ஏற்கும் நாளில் பாதுகாப்பு காரணம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை காலை 7 மணியில் இருந்து 1 மணி வரை முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.