மூதூரில் தமிழ் பிரதேசசபை அமைக்க கோரிக்கை விடுத்து கிழக்கு ஆளுநரிடம் நூல் கையளிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மூதூர் பகுதியில் தமிழ் பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுதப்பட்ட நூல் ஒன்றினை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மூதூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் முத்துக்குமார் சௌந்தரராஜன் எழுதிய "கொட்டியாரப்பற்றும் தமிழர்களும்" எனும் தலைப்பிலான நூலின் பிரதி கிழக்கு மாகாண ஆளுநரிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்நூலின் பிரதியினை திருகோணமலை சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் மற்றும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பீ. ஜெயசீலன் ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்து வைத்தனர்.