வவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை தொடர்பில் விசாரணை

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலமொன்று காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.