திருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தின விழா

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சர்வதேச முதியோர் தின விழா இன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் "முதியோர்களாகிய உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி" எனும் தொனிப்பொருளில் இம்முதியோர் தின விழா முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் 45 பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களின் கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல். ஏ. அஸீஸ், கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ. எச். எம். அன்சார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தெற்கு மாகாணத்தில் முதியோர் இல்லங்களை அமைக்கவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

தென் மாகாணத்தில் 30 வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளதுடன் 15 வருடங்களாக முதலமைச்சராக இருந்துள்ளேன்.

அப்போது முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு இடமளிக்கவில்லையெனவும், பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடக்கூடாது என்பதற்காகவே நான் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு இடமளிக்கவில்லை.

முதியோர்கள் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தேன்.

எனது தாயாருக்கு 84 வயது நான் தற்பொழுது வீட்டிலிருந்து புறப்படும் போது எனது தாய் அருகே சென்று எனது வழிபாட்டை மேற் கொண்ட பின்னரே நான் எனது கடமைக்கு செல்வேன்.

இதேபோன்று எனது பிள்ளைகளும் அவ்வாறே எனது அருகே வந்து ஆசீர்வாதத்தை பெற்று அவர்களும் கடமைகளுக்கு செல்கின்றனர்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது உலகத்தில் அனைவரும் தங்களது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் ஒரே வீட்டில் சாகும்வரை இருப்பயே நா ன் விரும்புவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாங்கள் எமது பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றபோது தான் எமது எதிர்காலமும், எதிர்கால சிறார்களும் இவ்வாறு வளரும் எனவும் கூறியுள்ளார்.