சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில்

Report Print Yathu in சமூகம்
48Shares

கிளிநொச்சியில் 97ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதை அடுத்து, கடல்சார் கண்காட்சியையும், மாதிரி விற்பனை நிலையத்தினையும் அரசாங்க அதிபர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து முதன்மை கூட்டுறவாளர் இராசநாயகம் மண்டபத்தின் பெயர்ப்பலகை அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் அங்கத்துவ சங்கங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.