அரசாங்க அறிவித்தலை மீறி வவுனியாவிலும் வேலைநிறுத்த போராட்டத்தில் புகையிரத ஊழியர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

அரசாங்க அறிவித்தலை மீறி தொடர்ந்தும் புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவிலும் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் புகையிரத பயணிகளும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளை நாடி வருகின்றனர்.