தமிழ் மக்களுக்காக இரு கண்களையும் இழந்தவரின் தற்போதைய நிலை

Report Print Ashik in சமூகம்

2007ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும், ஒரு காலையும் இழந்த நிலையில் என்ன செய்வது என அறியாது வாழ்ந்து வருகின்றார் முன்னாள் போராளியான இராமையா புஷ்பரெட்ணம்.

வெள்ளாங்குளம் கணேசபுரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் மனைவியின் துணையோடு வாழ்ந்து வரும் இராமையா புஷ்பரெட்ணம் கண் மற்றும் காலை இழந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்து வருகின்றார்.

தொடர்ச்சியாக மீள் குடியேறி பல்வேறு பட்ட சிரமங்கள் மற்றும் பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் போராட நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்கையை கொண்டு செல்கின்றார். பல நேரங்களில் ஒரு வேளை உணவுடனே தமது நாளை கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இராமையா புஷ்பரெட்ணம் வாழ்வாதரத்திற்கு பிரதேச செயலகம் ஊடாக கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனாலும், பார்வை உள்ளவர்களே ஒழுங்காக பராமரிக்க முடியாத கோழிக் குஞ்சுகளை பராமரித்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்லலாம் என்று நம்பி ஏமாற்றமே மிஞ்சியது. நோய் காரணமாகவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் கோழி வளர்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மனைவி பசிக்கு வறுமை தெரியாது என்பதால் எனோ ஒருவேளை உணவுக்காகவாவது உழைக்க வேண்டும் என தற்போது தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது மருத்துவச் செலவும் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடும் புஷ்பரெட்ணம் பார்வையற்றவர்கள் செய்யக்கூடிய ஏதவது தொழில் வாய்ப்பை செய்வதற்கான உதவியை கோருகின்றார் .

எமக்காக போராடி கண்பார்வை இழந்த புஷ்பரெட்ணம் போன்ற போராளிகளுக்கு கோடி கோடியாய் கொடுக்காவிட்டாலும் ஒரு வேளை உணவுக்காவது உதவி செய்ய வேண்டியது எமது கடமையாகும்.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 0770569580 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

.