வவுனியாவில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வு வவுனியாவில் இன்று நடைபெற்றுள்ளது.

இலஞ்சம் நாட்டையும், சமூகத்தையும் நாசமாக்கும் என்னும் தொனிப் பொருளில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

வவுனியா புதிய பேரூந்து நிலையம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதுடன், ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 1954 என்கின்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.