இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த நால்வர் கைது

Report Print Sumi in சமூகம்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீர்வள திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன்போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழக மாநிலம் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.