இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேரை 8 பைப்பர் படகுளுடன் இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், எழுவை தீவு பகுதியில் இன்று மதியம் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறிய ரக பைப்பர் படகுகளில் நண்டு வலையை பயன்படுத்தி நண்டு மீன்கள் பிடிப்பதற்க்காக மீனவர்கள் சென்றுள்ளனர்.

அப்போது இந்திய -இலங்கை சர்வதேச கடல் எல்லை அருகே வலை விரித்து கொண்டிருந்த போது காற்றின் வேகம் காரணமாக மீனவர்களின் படகு இந்திய எல்லைக்குள் வந்ததால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இந்திய கடலோர காவல் படை 12 மீனவர்களையும் அவர்களது 6பைப்பர் படகுகளையும் கைது செய்து கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த கடலோர காவல்படை வீரர்கள் இந்திய கடல்பகுதியில் இரண்டு பைப்பர் படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் யாழ்பாணத்தில் இருந்து மீன்பிடிப்பதற்க்காக வந்த போது இந்திய எல்லை என தெரியாமல் இந்திய கடல் பகுதிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மீனவர்களையும், படகையும் காரைக்கால் கடலோர காவல்படைக்கு சொந்தமான சி435 ரோந்து கப்பலிடம் ஒப்படைத்தனர்.

இதன்படி இந்திய கடலோர காவல் படையால் இன்று மொத்தமாக கைது செய்யப்பட்ட 18 மீனவர்களையும் 8 படகையும் நாளை காலை 7மணியளவில் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வர உள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.