யாழிலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்ல முற்பட்ட கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாண பகுதியிலிருந்து கேரளா கஞ்சாவினை எடுத்து வந்த சந்தேகநபரொருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று இரவு 9 மணியளவில் யாழ்ப்பாண பகுதியிலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு 1கிலோ 855கிராம் கேரளா கஞ்சாவினை எடுத்து வந்த ஒருவரை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து போதை ஒழிப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது கொழும்பு, கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த (38வயதுடைய ) நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.