இன்று அதிகாலை தவிர்க்கப்பட்ட பாரிய அனர்த்தம்! விரைந்து செயற்பட்ட பேருந்து சாரதி

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மதவாச்சி பிரான வீதியின் உயிலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பசு ஒன்று உயிரிழந்துள்ள போதும் சாரதியின் சாதுரியத்தினால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் மன்னார் வந்த தனியார் சொகுசு பேருந்தொன்று மதவாச்சி - மன்னார் பிரதான வீதியின் உயிலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சொகுசு பேருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த வீதியை திடீரென மாடுகள் கடக்க முற்பட்டுள்ளன.

இதன்போது பசுவொன்று பேருந்துடன் மோதியுள்ள நிலையில் பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு உடனடியாக பேருந்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பேருந்திலிருந்த பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதுடன், பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் அடைத்து பராமரிக்காமையினால் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், எனவே கால்நடைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...